உச்சக்கட்ட மகிழ்ச்சியில் தொகுப்பாளினி பிரியங்கா…. விசேஷம் என்னனு தெரியுமா?

பிரபல ரிவியில் முன்னனி தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்கா தனக்கென்று அதிகமான ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் ஆவார். ஆரம்பத்தில் வானொலியில் வேலை செய்துவந்த பிரியங்கா மா.கா.பா மூலம் பிரபல ரிவிக்குள் தொகுப்பாளினியாக நுழைந்தார். பிரபல ரிவிக்குள் வருவதற்கு முன்பு திருமணம் முடிந்து பின்பு ஏற்பட்ட மனக்கஷ்டத்தால் கணவரை பிரிந்து வாழ்ந்தார். காதல் திருமணம் செய்ததால் பெற்றோர்கள் ஆதரவு இன்றி தனிமையில் இருந்த தருணத்திலேயே மா.கா.பா இவருக்கு உதவி செய்துள்ளார்.

அதன்பின்பு பிரவீனைக் காதலித்து கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி 19ம் திகதி திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தற்போது இன்று இவர்களது 3ம் ஆண்டு திருமணநாள் விழாவினை கொண்டாடியுள்ளனர். தனது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தும் விதமாக திருமண புகைப்படங்களை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.