இயக்குநர் டி.ராஜேந்தர் மகனும், லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவின் சகோதரருமான, குறளரசன் காதல் அழிவதில்லை படத்தில் கதாநாயகியின் தம்பியாக நடித்திருந்தார். பிறகு சிம்பு நடித்த ‘இது நம்ம ஆளு’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். சமீபத்தில் தனது பெற்றோர்கள் சம்மதத்துடன் தந்தை டி ராஜேந்தர் முன்னிலையில் இஸ்லாம் மதித்திற்கு மாறியுள்ளார் குறளரசன். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி மிகப்பெரும் வைரலானதோடு, குறளரசன் முஸ்லீம் மதத்தை சார்ந்த பெண்ணை காதலித்து வருவதாகவும் அவரை திருமணம் செய்யவே இந்த திடீர் மத மாற்றம் என பரவலாக பேசப்பட்டது.
இந்நிலையில் தற்போது இது குறித்து பேசியுள்ள அவரின் தந்தை டி. ஆர், எனது மகன் மதம் மாறியது உண்மை தான். அவர் விரும்பி தான் இஸ்லாம் மதத்தை தேர்ந்தெடுத்தார். அது அவருடைய தனிப்பட்ட விருப்பம். அதே நேரத்தில் எங்களுக்கு எம்மதமும் சம்மதமே… அதனால் என் மகனின் முடிவை நான் மதிக்கிறேன் என்று கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
