மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை முக்தா. தமிழில் விஷால், பிரபு, நதியா என பலர் நடித்து வெற்றிகரமாக ஓடிய படம் தாமிரபரணி. இப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை முக்தா. தாமிரபரணி படத்துக்கு பிறகு தமிழில் “ரசிகர் மன்றம், அழகர் மலை, சட்டப்படி குற்றம், மூன்று பேர் மூன்று காதல், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, வாய்மை, வாசுவும் சட்டை” என அடுத்தடுத்து சில படங்களில் முக்தா நடித்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கனடா மொழி படங்களில் நடித்து வருகிறார். நடிகை முக்தா ஒரு சில தொடர்களிலும் நடித்து வருகிறார். சன் தொலைக்காட்சியில் சந்திரகுமாரி சீரியலில் நடிகை ராதிகாவுடன் இணைத்து நடித்தார். நடிகை முக்தா கடந்த 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி ரிங்கு டாமி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
நடிகை முக்தா ரிங்கு ஜோடிக்கு கியாரா என்ற அழகிய மகள் உள்ளார். சமீபத்தில் நடிகை முக்தா இவரது மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு பெரிய அழகிய மகளா என்று வாயடைத்து போயுள்ளனர்.