இவ்வளவு பெரிய பசங்களா நடிகர் ஸ்ரீகாந்த்-க்கு!! வெளியான அழகிய புகைப்படம் இதோ…

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களுள் ஒருவர் நடிகர் ஸ்ரீகாந்த். 2002ம் ஆண்டு ரோஜா கூட்டம் படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். அப்படம் அவருக்கு பெரிய ரீச் கொடுத்தது என்றே கூறலாம். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு போன்ற பல படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். ஜூட், துரோகி, போஸ் என பல்வேறு ஆக்க்ஷன் படங்களில் நடித்துள்ளார் ஸ்ரீகாந்த்.

இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்திரன் இயக்கிய ஜன்னல் என்ற சீரியலில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார் ஸ்ரீகாந்த். 2012 ஆம் ஆண்டு இயக்குனர் சங்கர் இய்யாக்கி தளபதி விஜய், ஜீவா, இலியானா, சத்யராஜ் என பலர் நடித்து வெற்றியடைந்த படம் தான் நண்பன். இதில் விஜய்யின் நண்பன் கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டை பெற்றார் நடிகர் ஸ்ரீகாந்த். தமிழை தொடர்ந்து தெலுங்கு, மலையாளத்திலும் சில படங்கள் நடித்துள்ளார்.

ஸ்ரீகாந்த்க்கு 2007ம் ஆண்டு வந்தனா என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த ஜோடிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். இந்த நிலையில் முதன்முறையாக நடிகர் ஸ்ரீகாந்தின் மகன், மகளின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதைப்பார்த்தவர்கள் நடிகர் ஸ்ரீகாந்திற்கு இவ்வளவு பெரிய பசங்களா என ரசிகர்கள் ஆச்சரியமாக பார்க்கின்றனர். இதோ அவர்களின் புகைப்படம்,

Leave a Reply

Your email address will not be published.