தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் காமெடி நடிகர் பாண்டி. தமிழில் 2000 வெளியான நாசர், விவேக், வடிவேலு போன்றவர்கள் நடித்த கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற காமெடி படத்தில் வடிவேலுவின் மகனாக நடித்திருப்பார். அதற்கு பிறகு கில்லி, ஆட்டோகிராப், தீக்குச்சி, சாட்டை போன்ற பல படங்களில் இவரது காமெடிகள் மிகவும் ரசிக்கப்பட்டது. பூஜை படத்தில் சூரி பாண்டியின் காமெடி அசத்தலாக இருக்கும்.

ஆட்டோகிரபிற்கு பிறகு இவருக்கு விஜய் டீவி யில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் இவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வரத்தொடங்கின. தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணியாக காமெடி நடிகர்கள் தான் இருப்பார்கள். தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த பாண்டி 7 வருடமாக பத்மினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
பத்மினி எம்.பி.ஏ பட்டதாரி. பல போராட்டங்களை சந்தித்து கடந்த 2013 டிசம்பர் மாதம் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஐஸ்வர்யா மாலில் பத்மினியை திருமணம் செய்து கொண்டார். பாண்டியனை அறிந்த ரசிகர்கள் அவரின் மனைவியை கண்டிருக்க வாய்ப்பில்லை. பாண்டியின் திருமணப் புகைப்படங்கள் இதோ. இதனை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.