தமிழில் குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை நடிகராகா திகழ்பவர் எம்.எஸ்.பாஸ்கர். திருமதி ஒரு வெகுமதி படத்தின் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின்னர் பல படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார். மேலும் சித்தி, அரசி, சின்ன பாப்பா பெரிய பாப்பா போன்ற பல சீரியல்களிலும் நடித்துள்ளார். எட்டு தோட்டாக்கள் படத்தில் நடித்ததற்கு சிறந்த துணை நடிகருக்கான விருதைப் பெற்றார் எம்.எஸ்.பாஸ்கர்.

96 படத்தில் விஜய் சேதுபதியின் பள்ளி பருவக் கதாபாத்திரத்தில் அவரது மகன் ஆதித்யா பாஸ்கர் தனது அறிமுகமானார். நடிகர் எம் எஸ் பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யா வெளியிட்ட பதிவு ஒன்று தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. ஐஸ்வர்யா பாஸ்கர் டப்பிங் ஆர்டிஸ்டாக தமிழ் சினிமாவில் உலா வருகிறார். தற்போது ஜான்வி கபூர் நடித்துள்ள குஞ்சன் சக்சேனா: தி கார்கில் கேர்ள் படம் குறித்து சுவாரஸ்யமான தகவல் தெரிய வந்துள்ளது.
இத்திரைப்படத்தின் தமிழ் டப்பிங் வெர்ஷனுக்கு, ஐஷ்வர்யா பாஸ்கர் குரல் கொடுத்துள்ளார். இதேவேளை, இவர் தமிழில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த எம்.எஸ்.பாஸ்கரின் மகளாவார். டப்பிங் துறையில் கலக்கி வரும் ஐஷ்வர்யா பாஸ்கர், இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த தகவல் பலருக்கு தெரியாத நிலையில் ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.
View this post on Instagram
All that I want in life is to see this person happy ♥️ ? Happy Birthday appana ? #mostfavpic