இவ்வளவு அழகிய மகளா..!! தாத்தா ஆக போகும் விக்ரம்…அட இவர்தான் மருகனா!!

தமிழ் திரையுலகில் மிகவும் கடின உழைப்பாளியான ஒரு நடிகர் சியான் விக்ரம். சேது என்னும் படத்தின் மூலம் திரையுலக ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார் விக்ரம். இப்படமே இவரின் திரை வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றது. இந்த வெற்றிக்குப் பின் தில், ஜெமினி, தூள், சாமி போன்ற படங்களில் நடித்தார். இவர் காசி எனும் படத்தில் பார்வை அற்றவராக நடித்து திரை விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றார்.

பின்னர் பிதாமகன் படத்தில் வெட்டியான் கதாப்பாத்திரத்தை தத்ரூபமாக வெளிக்கொணர்ந்து தேசிய விருது பெற்றார். அதன் பின் அந்நியன், மஜா, பீமா, கந்தசாமி போன்ற படங்களில் நடித்து தன் திரைப் பயணத்தை தொடர்ந்தார். தெய்வத் திருமகள் என்னும் படத்தில் மனவளர்ச்சி குன்றியவராக இவரது நடிப்புத் திரை விமர்சகளிடமிருந்து பாராட்டுக்களைப் பெற்றது. விக்ரம் வெவ்வேறு சமூக நிகழ்ச்சிகளை முன் நின்று நடத்தியுள்ளார்.

இவர் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா எனும் படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு துருவ் விக்ரம் மகன் மற்றும் அக்ஷிதா எனும் ஒரு மகள் இருக்கிறார்கள். சீயான் விக்ரமின் மகள் அக்ஷிதா கடந்த 2017 ஆம் ஆண்டு மனுரஞ்சித் என்பவரை இரு வீட்டார் சமதந்துடன் திருமணம் செய்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *