விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை மைனா நந்தினி. இவரின் நகைச்சுவை மற்றும் எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். இவர் சினிமாவில் வம்சம், ராஜா ராணி, தர்மபிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் நடித்திருந்தார் நந்தினி.

நடிகை நந்தினி மற்றும் யோகேஸ்வரனின் திருமணம் கடந்த ஆண்டு நடைபெற்றுது. இதில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தனர். கடந்த சில மாதங்களாக நடிகை மைனா கர்ப்பமாக இருந்தனர். சமீபத்தில் தான் இவருக்கு மிகவும் எளிமையாக சீமந்தம் கூட நடந்து முடிந்தது. மைனா மற்றும் யோகேஷ் தம்பதி முதல் குழந்தையை எதிர்நோக்கி இருந்த நிலையில் சமீபத்தில் மைனாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது.
தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் மூலம் தங்களது முதல் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டனர். குழந்தை பிறந்து ஒரு மாதமே ஆன நிலையில் சாதாரண வாழ்க்கைக்கு திரும்பி நாடங்கங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை மைனா நந்தினி தங்களது முதல் குழந்தைக்கு வைத்துள்ள பெயரை கூறியுள்ளார். ஆம் தனது குழந்தையின் பெயர் ‘ துருவன் ‘ என வைத்துள்ளராகலாம்.