இளம் விதவை பெண்ணிற்கு தூக்க மாத்திரை கொடுத்து சகோதரன் மற்றும் சகோதரியின் கணவர் செய்த கேவலமான செயல்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கணவன் இறந்ததால் இளம் வயதிலேயே விதவையான பெண்ணை பிறந்த வீட்டினர் காணக்கூட அனுமதிக்காமல் 20 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த கணவனின் உறவினர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அலிகாரைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தாத்ரியைச் சேர்ந்த இளைஞருடன் திருமணம் நடைபெற்றது. கடந்த ஜனவரி மாதம் அவர் உயிரிழந்தார். இந்நிலையில் அதுவரை புலந்த் சாகரில் வசித்து வந்த இளம்பெண்ணின் கணவன் குடும்பத்தினர் தாத்ரியிலேயே ஒரு வீடு பிடித்து வந்து சேர்ந்தனர்.

இளம்பெண்ணையும் தங்களுடனேயே வலுக்கட்டாயப் படுத்தி வைத்துக்கொண்ட அவர்கள் பெண்ணின் தாய் வீட்டினர் மீண்டும் மீண்டூம் அந்தப் பெண்ணைப் பார்க்கவோ, அவருடன் பேசவோ அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த அந்தப் பெண்ணின் சகோதரன் உள்ளிட்ட தாய் வீட்டினர் சுமார் 20 நாட்களுக்குப் பின் தங்கள் வீட்டுப் பெண்ணை மீட்டுத் தரக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் பேரில் பெண்ணின் கணவன் வீட்டுக்குச் சென்ற போலீசார் பெண்ணை மீட்டுக் கொண்டு வந்த போது அந்தப் பெண்ணின் தாய் வீட்டினருக்கு அதிர்ச்சிகள் காத்திருந்தன. அந்தப் பெண் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தனது கணவனின் இளைய சகோதரனும், சகோதரியின் கணவனும் தன்னை தினமும் பலமுறை பாலியல்பலாத்காரம் செய்ததாகத் தெரிவித்தார்.

தனக்கு அவர்கள் தூக்க மாத்திரை கொடுத்து உறங்கச் செய்த அவர்கள் இருவரும் தினமும் முறை வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகத் கூறினார். அந்த இருவர் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.