இளம் விதவைக்கு உறவினருடன் தவறான தொடர்பு – கட்டிலில் தனியாக இருந்த போது நேர்ந்த விபரீத சம்பவம்!

சென்னையில் வீட்டில் தனியாக இருந்த விதவை கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் கொலையாளி பொலிசில் சரணடைந்தார்.திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்தவர் திலகா (32). இவருடைய கணவர் தீபன் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார்.இதையடுத்து தனது மகள் பிரின்சி (12) உடன் திலகா வசித்து வந்தார்.

திலகா சத்துணவு கூடத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்ததாக தெரிகிறது. பொங்கல் விடுமுறைக்காக பிரின்சி, திருத்தணியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்று விட்டாள். திலகா மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார்.நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு மேல் திலகா வீட்டுக்கு அவரது தூரத்து உறவினரான குமார் (42) என்பவர் வந்து சென்றார்.

நேற்று காலை 10 மணி வரை திலகா வீட்டின் கதவு பூட்டியே கிடந்தது. கதவை தட்டிப்பார்த்தும் திறக்காததால் சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளரான மல்லிகா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தார்.

வீட்டின் உள்ளே தரையில் திலகா, மர்மமான முறையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்துவந்த பொலிசார் நடத்திய விசாரணையில், திலகா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.இது தொடர்பாக பொலிசார் விசாரித்து வந்த நிலையில், திலகாவின் உறவினரான குமார், காவல் நிலையத்தில் நேற்று மதியம் சரண் அடைந்தார்.

விசாரணையில், திலகாவின் கணவர் தீபன் உயிருடன் இருக்கும்போதே குமாருக்கும், திலகாவுக்கும் 4 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்ததாக தெரிகிறது. குமாருக்கு திருமணமாகி மனைவி, 2 மகள்கள் உள்ளனர். இந்த விவகாரம் அறிந்த குமாரின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.நேற்று முன்தினம் தனது வீட்டுக்கு வந்த குமாரிடம், இனிகுடும்ப செலவுக்கு நீதான் பணம் தரவேண்டும். இல்லாவிட்டால் உன் வீட்டுக்கே வந்துவிடுவேன் என்று கூறினார்.

இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்ட குமார், திலகாவுக்கு 2 தூக்க மாத்திரைகள் கொடுத்து, அவர் மயங்கியதும் ரிப்பனால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றார்.பின்னர் பொலிஸ் தேடுவதை அறிந்த குமார், தானே வந்து சரணடைந்தது தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.