இளம் நடிகை, நான் பிக்பாஸ் போகவில்லை என சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி.. வருத்தத்தில் ரசிகர்கள்!!

தொலைக்காட்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். கடந்த மூன்று சீசன்களை போல் இந்த சீசனும் கமல் தான் தொகுப்பாளராக உள்ளார். பிக்பாஸ் சீசன் 4 தமிழ் எப்பொழுது என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த ஆண்டு நடக்குமா, நடக்காதா? என்று பேசப்பட்ட நிலையில், அண்மையில் ஸ்டைலிஷான லுக்கில் கமல் ஹாசன் எண்ட்ரி கொடுக்க சூப்பராக இதுவரை இரண்டு ப்ரோமோ வெளியானது.

இந்நிலையில் மூன்றாம் ப்ரோமோ இந்த வாரம் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. செப்டம்பர் இறுதி வாரத்தில் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் தமிழ் பிக் பாஸ் 4 துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் ரசிகர்கள் முக்கியமாக போட்டியாளர்கள் யார் யார் இருப்பார்கள் என்றே இன்னும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

இதையடுத்து, ஏற்கனவே பிகில் படத்தில் தென்றல் கதாபாத்திரத்தில் நடித்த அமிர்தா ஐயர் பிக் பாஸில் கலந்து கொள்வதாக பல செய்திகள் வெளியானது. ஆனால், தற்போது அதை மறுத்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தவறான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறேன். நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போகவில்லை. நன்றி என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.