இளம் நடிகையுடன் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரழந்த நபர்! – அதிர்ச்சியில் ரசிகர்கள்! பாலிவுட் சினிமாவை சேர்ந்த இளம் நடிகை Zarine Khan. அண்மையில் வந்து ஹிட்டான ஹவுஸ் ஃபுல், வீர் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழில் நான் ராஜாவாக போகிறேன் படத்தில் சின்ன ரோலில் நடித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன் தன் முன்னாள் மேனேஜர் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் நேற்று அவர் கோவா சென்ற போது கார் விபத்தில் சிக்கியுள்ளது. காரின் மீது டூவீலரில் வந்த நபர் (31 வயது) மோத உடனே தூக்கி எறியப்பட்டுள்ளார். இதனால் அவரின் தலையில் பலத்த அடிப்பட்டுள்ளது. உயிருக்காக போராடிய அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிர் இழந்துள்ளார் .
மேலும் நடிகைக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாம். இந்த நில்கழ்வு பாலிவூட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மட்டுமல்லாமல் இந்த நடிகையை சர்ச்சையிலும் சிக்கவைதுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் பாலிவுட் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .