இலங்கை ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய பிக் பாஸ் புகழ் தர்ஷன். என்ன விஷயம் தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல பெயர்களின் உள்ளங்களில் இடம்பிடித்தவர் தர்ஷன். பல பிரபலங்கள் இதில் கலந்து கொண்டாலும் அவர் நம் எல்லோர் மனத்திலும் இடம் பிடித்துவிட்டார். மேலும் அவர் தற்போது இலங்கைக்கு வரவுள்ளதாக அறிவுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் .இதனை கேட்ட இலங்கை ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக பலராலும் கருதப்பட்ட தர்ஷன் வெற்றி பெறவில்லை என்றாலும் பலரின் மனதில் இடம்பிடித்துள்ளார் என்பது தான் உண்மை. தன்னுடைய அழகான சிரிப்பின் மூலம் பல உள்ளங்களை கொள்ளை கொண்டுள்ளார். தர்ஷனின் இயல்பான மற்றும் தைரியமான குணங்கள் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.

அது மட்டும் இல்லாமல் பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு பிரச்னையையும் எதிர்கொள்ளும் விதம், துணிச்சலோடு கேள்வி கேட்டது என்பது எல்லோருக்கும் எளிதில் வந்து விடாது என்று கூறினார் தர்ஷன்.

Leave a Reply

Your email address will not be published.