இலங்கையை சேர்ந்த நடிகை ராதிகாவுக்கு நடிகர் சரத்குமாருடன் காதல் மலர்ந்தது எப்படி?

தமிழ்படங்களில் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள நடிகர் சரத்குமார் தற்போது சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராக உள்ளார். சரத்குமார் நடிக்க ஆரம்பித்த சில வருடத்தில் 1984ஆம் ஆண்டு சாயா தேவி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. அவர்களில் முதல் பெண் குழந்தைகள் வரலட்சுமி சரத்குமார். மேலும், பூஜா என்ற மகளும் உள்ளனர். இதற்கிடையில் நடிகர் சரத்குமாருக்கும் நடிகை நக்மாவுக்கு காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது. இதனால் மனமுடைந்த சாயா தேவி அவரிடமிருந்து கடந்த 2000ம் ஆண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டார்.

காதல் எல்லை மீறிவிட்டதாக நக்மா தெரிவித்திருந்தார். இதற்கிடையில், நடிகை ராதிகாவுடன் ஆரம்பத்தில் நட்பில் இருந்த சரத்குமார் பின்னர் அவரை காதலிக்க தொடங்கியுள்ளார் திருமணத்திற்கு முன்னர், இருவரும் சேர்ந்து கார்கில், நம்ம அண்ணாச்சி, சூரியவம்சம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அப்போதிருந்தே இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர்.

2001 ஆம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் திருமணம் ந்டைபெற்றது. இவர்கள் இருவருக்கும் ராகுல் என்ற மகன் உள்ளார். நடிகை ராதிகாவுக்கு, சரத்குமார் மூன்றாவது கணவர் ஆவார்.

லண்டனை சேர்ந்த நபரை முதல் திருமணம் செய்த ராதிகா, இரண்டாவதாக நடிகர் பிரதாப் போத்தனை திருமணம் செய்தார். நடிகர் எம். ஆர். ராதாவுக்கும் இலங்கையை சேர்ந்த அவரின் மூன்றாம் மனைவி கீதாவிற்கும் பிறந்தவர் நடிகை ராதிகா.

Leave a Reply

Your email address will not be published.