கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் மாரடைப்பு காரணமாக ஜூன் 7 ஆம் தேதி உயிரிழந்தார்.இந்த செய்தி கன்னட திரையுலகினரை பெரும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. வளர்ந்து வந்த இளம் ஹீரோவின் மரணத்தை தற்போதுவரை அவரது நெருங்கிய நண்பர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
இதையடுத்து நடிகை பிரியாமனி, நடிகர் அல்லு சிரீஷ், குஷ்பு, கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே உள்ளிட்ட பலரும் அவரது இறப்பிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இவர் நடிகை மேக்னா ராஜை கடந்த 2018 ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.தற்போது, மனைவி மேக்னா ராஜ் தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். மனைவிக்கு வளைகாப்பு நடத்தி அழகு பார்க்கவேண்டும் என சிரஞ்சீவி சார்ஜா அவ்ளளவு ஆசைபட்டாராம்.
குழந்தையை பார்ப்பதற்கு முன்னரே மரணித்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் அவரது பண்ணை வீட்டு தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அப்போது மனைவி மேக்னா கடைசியாக கணவரை கட்டிப்பிடித்து கதறி அழுது முத்தமிட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.