இரண்டு இந்திய விமானங்களை சுட்டுவீழ்த்திய பாகிஸ்தான்… விமானிகள் சிறைபிடிப்பு- வீடியோ ஆதாரம் வெளியானது

இரண்டு இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான், விமானிகளை சிறைப்பிடித்து வைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இன்று அதிகாலையில் இருந்து இந்தியா – பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் துப்பாக்கி சண்டை நடைபெற்று வந்த நிலையில், இந்தியா எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டதாக இந்தியா தெரிவித்தது. இதற்கிடையில் பாகிஸ்தான் தரப்பில், கட்டுப்பாட்டை தாண்டி வந்த இரண்டு இந்திய விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் ஆயுதப்படை செய்தி தொடர்பாளர் மேஜர் ஆசிப் காபூர் தெரிவித்துள்ளார். சுட்டுவீழ்த்தப்பட்ட இரண்டு விமானங்களில் ஒன்று பாகிஸ்தான் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் விழுந்துவிட்டதாகவும் மற்றொன்று ஜம்மு மற்றும் காஷ்மீரில் விழுந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்திய விமானிகளை சிறைப்பிடித்துள்ளதாகவும், அவர்களிடமிருந்து ஆவணங்கள் மற்றும் ஆயுதங்களை கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் ஒருவர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மற்றொருவர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதில் ஒருவரது பெயர் அபிநந்தன் என தெரியவந்துள்ளது, எனினும் இந்திய அரசு இதுகுறித்து எந்தவொரு பதிலையும் தெரிவிக்கவில்லை. இதற்கிடையில் பாக்கிஸ்தான் வெளியுறவு அமைச்சம் சார்பில் கூறியுள்ளதாவது, பாகிஸ்தான் நட்டின் நோக்கம், உரிமை, திறன் மற்றும் சுய பாதுகாப்புக்கான திறனைக் காட்டுவது நேரம் இதுவாகும்.

நாங்கள் எதனையும் பெரிதுபடுத்த விரும்பவில்லை. ஆனால், எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் அவ்வாறு செய்ய வேண்டிய நிலைக்கு முழுமையாக தயாராக இருக்கிறோம், அதனால்தான் நாங்கள் தெளிவான எச்சரிக்கையுடன் மற்றும் வெளிப்படையான பகல் நேரத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்டோம் என்று கூறியுள்ளது. இதற்கிடையே இந்திய விமானங்கள் எதையும் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி 2016 ஆம் ஆண்டு விமான கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான ஜெட் விமானத்தின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பாகிஸ்தான் ஊடகங்கள் தற்போது நடந்த சம்பவம் போன்று வெளியிட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published.