இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி உலகநாயகன் நடிக்கும் படத்தின் வில்லன் இவர் தானா..! வெளியான தகவல்

தமிழ் சினிமாவில் தற்போது வளந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் மற்றும் கைதி உள்ளிட்ட படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தான் மாஸ்டர். கொரோனா காரணமாக தள்ளிப்போன இப்படத்தின் ரிலீஸ் 2021 ஆம் ஆண்டின் பொங்கல் அன்று திரைக்கு வரும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் உலக நாயகன் கமல் ஹாசனை வைத்து தான் படம் எடுக்க போகிறார் என அதிகாரப்பூர்வமாகவே தெரிந்துவிட்டது.

இப்படத்தின் அறிவிப்பு இரு தினங்களுக்கு முன்பு வெளிவந்திருந்தது. இந்த போஸ்டரில் ” Once upon a time there lived a ghost ” என பதிவிட்டு, ” கமல் ஹாசன் 232 ” என்று ஒர்கிங் டைட்டில் வைத்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தில் கமல் ஹாசனுக்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க போகிறார் என தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் இது குறித்து இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.

ஆனால் கமல் ஹாசனின் 60 வருட நிறைவு நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கமல் ஹசனிடம் கேட்ப்பார். அதனால் இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது என கூறுகின்றனர். மேலும் கமல் ஹாசனின் தலைவன் இருக்கின்றான் படத்திலும் விஜய் சேதுபதி நடித்து வருவதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.