இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அடுத்த திரைப்படம் குறித்த வெளியான அதிகாரப்பூர்வ தகவல்..!

தமிழ் சினிமாவில் தற்போது வளந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். கடந்த வருடம் இவர் இயக்கி தீபாவளிக்கு வெளியான படம் தான் கைதி. மாநகரம் மற்றும் கைதி உள்ளிட்ட படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தான் மாஸ்டர். கொரோனா காரணமாக தள்ளிப்போன இப்படத்தின் ரிலீஸ், முழுமையாக தாக்கம் குறைந்ததும், குறிப்பாக 2021 ஆம் ஆண்டின் பொங்கல் அன்று மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வரும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தை தொடர்ந்து தான் இயக்கும் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பை நாளை மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை கூறிவருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் நடிகர் கமலின் ரசிகர்கள் இந்த டீவீட்டை வைத்து “எவேனென்று நினைத்தாய்” என்ற ஹாஷ்டாக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக நடிகர் கமல்ஹாசன் உடன் இணையவுள்ளார் என கூறப்பட்டு வந்த நிலையில் நாளை வெளியாகவுள்ள தகவலும் இது குறித்து தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published.