இயக்குனர் மணிரத்னம் படத்தில் நடித்துள்ள குக் வித் கோமாளி அஸ்வின்.. புகைப்படம் இதோ!

தற்போது பலரும் சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சி மற்றும் தொடர்களில் நடித்து அதன் மூலம் பிரபலமடைந்து வெள்ளித்திரையில் பலர் நடிகர் நடிகைகளாக வலம் வந்த வண்ணம் உள்ளனர். அதிலும் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பல புதுமுக நடிகர் நடிகைகள் மக்கள் மத்தியில் எளிதில் தங்களை பிரபலபடுத்தி கொண்டு சினிமா வட்டாரத்தில் பலரது கவனத்தை தன் க வர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த சேனலில் பிரபல ரியாலிட்டி சமையல் போட்டி நிகழ்ச்சியான குக் வித் கோ மாளி உலகளவில் பிரபலமாக உள்ளது. சொல்லபோனால் இந்த நிகழ்ச்சியை பார்க்காதவர்களோ பி டிக்காதவர்களோ இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் இதுவரை பலரும் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளனர்.

அப்படி, குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் அஸ்வின் குமார். இவர் நடிப்பில் தற்போது ‘என்ன சொல்ல போகிறாய்’ எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் இவருடன் இணைந்து விஜய் டிவி புகழும் நடித்து வருகிறார். இந்திய திரையுலக அளவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வருபவர் மணிரத்னம்.

இவர் இயக்கத்தில் இதுவரை பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் ஒன்று தான் ஓ காதல் கன்னமணி. இதில் துல்கர் சல்மான் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்நிலையில் இப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் குக் வித் கோ மாளி நடிகர் அஸ்வினும் நடித்துள்ளார். அந்த காட்சியின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி, ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதோ பாருங்க..

Leave a Reply

Your email address will not be published.