இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?

பாகுபலி படங்களுக்கு பிறகு இந்திய அளவில் பிரம்மாண்ட இயக்குனர் என பெயரெடுத்த ராஜமௌலி அடுத்ததாக ர த்தம் ர ணம் ரௌ த்திரம்(RRR) என்ற படத்தை இயக்கி வருகிறார். சுமார் 350 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரன் ஆகிய இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர்.

மேலும் நாயகியாக பாலிவுட் நடிகை ஆலியா பட் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரை போல தெலுங்கு சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி.

2009ம் ஆண்டு மகதீரா என்ற படம் மூலம் தன்னை நிரூபித்த ராஜமௌலி தொடர்ந்து ஈகா, பாகுபலி, அதன் இரண்டாம் பாகம் என எடுத்து உலகளவில் பிரபலமானார்.தற்போது அவர் தெலுங்கு சினிமாவின் டாப் நடிகர்களான ராம் சரண்- ஜுனியர் என்.டி.ஆரை வைத்து RRR என்ற படம் இயக்கி வருகிறார்.படத்திற்கான வேலைகள் எல்லாம் வேகமாக நடந்து வருகிறது.

இப்படி பிரம்மாண்ட படங்களை இயக்கி சாதனை படைத்துவரும் ராஜமௌலி அவர்களின் சொத்து மதிப்பு ரூ. 95 கோடிக்கும் மேலாக இருக்கும் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!