சினிமா துறையில் பல நபர்கள் உள்ளார்கள். அன்று முதல் இன்று வரை தமிழ் சினிமா துறை பல நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், என பல நபர்களை சந்தித்திருக்கும் என்று தான் சொல்ல வேண்டும். அதில் ஒரு சிலர் மட்டும் பன்முக திறமை வாய்ந்தவர்களாக இருப்பார்கள். இயக்கம், நடிப்பு, தயாரிப்பு என ஒரு சில திறமைகளை உள்ளடக்கியவரும் உண்டு. அந்த வரிசையில் இவரும் ஒருவர் தான். நடிகர், இயக்குனர், பேச்சாளர் என பன்முக திறமைகள் கொண்டவர் விசு அவர்கள். அண்மையில் காலமானார்.

அவரின் மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை உண்டாக்கியது. அவரின் மறைவுக்கு ரசிகர்கள் கவலை தெரிவித்தனர், திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். கொரோனா அச்சுறுத்தல் நிலவி வருவதால் பலர் சமூக வலை தளத்திலேயே இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் நாம் கேள்விப்படாத ஒரு விஷயம் இது என்று தான் நினைக்கிறோம். அது என்னவென்றால், 1970 களின் ஆரம்ப காலகட்டத்தில் விசு டிராவல் ஏஜெண்டாக இருந்தாராம். அப்போது அவர் பள்ளி ஆசிரியைகள் 40 பேரை அழைத்துக்கொண்டு இலங்கை சென்றாராம்.
அங்கு கதிர்காமம் முருகன் கோவிலின் அருகே அமர்ந்து கதை எழுதிக் கொண்டிருந்தாராம். பக்கத்திலிருந்த ஆசிரியை ஒருவர் அவரிடம் வந்து தூக்கம் வரவில்லை, நீங்கள் எழுதிக் கொண்டிருக்கும் கதையை சொல்லுங்கள் என அவரிடம் கேட்டாராம். அதனை தொடர்ந்து அவரிடத்தில் விசு கதை சொல்ல, இறுதியில் அந்த பெண் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். மேலும் அவர் நீங்கள் டிராவல் ஏஜென்ட் மட்டுமல்ல, பெரியளவில் சாதிப்பீர்கள் என கூறியுள்ளார். அந்த ஆசிரியை பெயர் உமா. இவரிடம் விசு நீங்கள் சொல்வது போல நான் பெரிய ஆள்.
ஆனால் அந்த கதாபாத்திரத்திற்கு உங்கள் பெயரையே வைக்கிறேன் என கூறியுள்ளார். விசு எழுதிய அந்த கதை தான் சம்சாரம் அது மின்சாரம். இப்படத்தில் நடிகை லட்சுமியின் அந்த கதாபாத்திரத்திற்கு உமா என அந்த ஆசிரியையின் பெயரையே விசு வைத்தாராம். படத்தில் மட்டுமல்ல வாழ் நாளின் கடைசி வரை கூட தன் மனைவியை உமா என்றே விசு அழைத்தாராம். இதைப்படிக்கும் நம் மனதில் சொல்ல முடியாத ஒரு விதமான நிகழ்வு ஏற்படுகிறது என்று தான் சொல்ல வேண்டும்.