இன்றைய ராசி பலன்கள் (09 அக்டோபர் 2020)

ஒவ்வொரு நாளின் தொடக்கத்தில் நாம் அந்த நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு அதற்கேற்றார் போல் முன் எச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்.

கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உங்களுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.இங்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்….

ஒவ்வொரு நாளின் தொடக்கத்தில் நாம் அந்த நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு அதற்கேற்றார் போல் முன் எச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள நினைத்த காரியங்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உங்களுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.இங்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்…

​மேஷம்

மேஷ ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். சுபச் செலவுகள் உண்டாகும். அலைச்சல்கள் அதிகமாக வாய்ப்பு உண்டு என்றாலும் அவைகளில் நன்மையே கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருந்து வரும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றியடையும்.

சுபகாரியங்கள் மற்றும் திருமணம் போன்றவற்றில் வெற்றி கிடைக்கும். வாகன வகைகளில் சுபச் செலவுகள் செய்யும் நாளாக இன்றைய நாள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறிய இடமாற்றத்தை பற்றிய சிந்தனைகள் செயல்பாடுகள் இருக்கும். அவைகளில் வெற்றியும் காண்பீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றமான நாள் ஆகும்.

சிறிதளவு பற்றாக்குறை இருந்தாலும் வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். உடல் நலம் நன்றாக இருந்து வரும். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். பத்திரிகைத்துறை மீடியா துறையில் இருப்பவர்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும் நாள் ஆகும்.

ஒரு மனிதனில் இருக்கும் இரண்டு தெய்வங்கள்; உணர்ந்தால் உயரத்திற்குக் கொண்டு செல்லும்

​ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். குடும்பத்தில் ஒற்றுமை மேம்படும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்களின் கல்வி நிலையில் மேல் நிலையை அடைவார்கள். சொத்துக்கள் வாங்குவது விற்பது போன்ற நடைமுறைகளில் வெற்றி கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு வெற்றி உண்டாகும் நாள் ஆகும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தங்கள் கண்முன்னே தென்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம் பற்றிய சிந்தனை கொண்டு இருப்பார்கள். இம்முயற்சிகளில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

பெண்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாகும். ஆடை ஆபரணம் அணிகலன் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. உறவினர்களின் வருகை நண்பர்கள் சந்திப்பு போன்றவற்றால் ஆதாயத்தையும், சந்தோஷத்தையும் பெறுவீர்கள். தொழில் முறையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

எண்களும் அவற்றிற்குரிய கிரகங்கள் என்ன தெரியுமா?

​மிதுனம்

மிதுன ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். அலைச்சல் சற்று அதிகமாக வாய்ப்பு உண்டு என்றாலும் அவர்களில் வெற்றி காண்பீர்கள். மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருந்து வரும். உயர் கல்வியை நோக்கி செல்பவர்களுக்கு முன்னேற்றமான சூழல் நிலவுகிறது.

திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி அடைவதாக இருக்கும். உங்களுடைய பேச்சிற்கு சமுதாயத்திலும், குடும்பத்திலும் மதிப்பும், மரியாதையும் உண்டாகும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய வாய்ப்பு கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும்.

சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு வெற்றி உண்டாகும். வாகன வகையில் ஆதாயம் இருக்கும். வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நன்மை உண்டாகும்.

சஞ்சீவி மலையை கொண்டு வந்த அனுமன் – வேலூர் பெரிய ஆஞ்சநேயர் கோயில் சிறப்பு

​கடகம்

கடக ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய வேலை மாற்றத்தை பற்றிய சிந்தனையில் இருப்பார்கள். இவைகளில் வெற்றி கிடைக்கும் .

ஒரு சிலருக்கு உத்தியோக உயர்வு ஏற்பட வாய்ப்பு உண்டு சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் நன்மையில் முடியும். திருமணம் போன்ற காரியங்களில் வெற்றி காண்பீர்கள். பெண்களுக்கு உகந்த நாளாகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு உத்தியோக உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

சிறிதளவு பற்றாக்குறை ஏற்பட்டாலும் வெற்றிகரமாக சமாளித்து முன்னேறுவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு நண்பர்கள் மூலம் பண உதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. சொந்த தொழிலில் புதிய வாய்ப்புகள் தென்படும். உடல் நலம் நன்றாக இருந்து வரும். மாணவர்களின் கல்வி மேல் நிலையில் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!