பிக் பாஸ் நிகழ்ச்சியானது மக்களுக்கு மிகவும் பிடித்த ஒரு நிகழ்ச்சியாக மாறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.குறிப்பாக மற்ற நிகழ்ச்சிகளை விட பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் மிகவும் பெரிய வரவேற்பு உள்ளது.

முந்தைய சீசன்கள் அளவிற்கு இல்லாவிட்டாலும் இந்த சீசன் சற்றே மக்களின் பொழுதை போக்கும் வகையில் சென்றுகொண்டிருக்கிறது.
கடந்த வார ஞாயிறு அன்று யாரும் எதிர்பார்க்காதபடி சனம் செட்டி வீட்டினை விட்டு வெளியேற்றப்பட்டார். முந்தின நாள் நடிகர் கமல் சனத்திற்காக சப்போர்ட் செய்து பேசினார்.
இந்நிலையில் அவர் வெளியேற்றப்பட்டதால் டிவிட்டர் பக்கத்தில் நோ சனம் நோ பிக்பாஸ் என்ற ஹாஸ் டேக்கை பயன்படுத்தி இந்தியளவில் டிரெண்ட்டாக்கியுள்ளார்கள் சனமின் ரசிகர்கள்.இந்நிலையில் ரகசியம் ஒன்று சனம் பற்றி இணையத்தில் வைரலாகியுள்ளது. சீக்ரெட் ரூம் என்று கடந்த ஆண்டு பிக்பாஸ் 3 சீசனில் சேரன் உள்ளே அனுப்பட்டார்.
இந்த சீசனில் பிக்பாஸ் சீக்ரெட் ரூமிற்கு சனம் சென்றுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. அதற்கு காரணம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி சனம் இன்னும் அவரின் வீட்டிற்கு செல்லவில்லையாம்.
ரசிகர்கள் பலரும் தங்கள் எதிர்ப்பை சமூக வலைதளங்களில் காட்டினர். அவர்களுக்கெல்லாம் ஆறுதல் அளிக்கும் வகையில் தற்போது சனம் ஷெட்டி அவரது வீட்டிற்கு செல்லாமல் பிக் பாஸ் வீட்டிலேயே ரகசிய அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
எனவே இந்த செய்தி 100% உண்மையானது என்றும் அவர் ஒரு சில நாட்களில் மறுபடியும் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்படுவார் என்றும், னம் ஷெட்டி மட்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் மறுபடியும் சென்றால், நிச்சயம் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ரணகளமாக இருக்கும் என்று ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.