அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் ஆர்யா. தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றம் கனடா மொழிகளிலும் சில படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் எங்க வீட்டு மாப்பிள்ளை எனும் நிகழ்ச்சி மூலம் நடிகர் ஆர்யாவை காதலித்து வருவதாக கூறி வந்தவர் அபர்ணதி. ஆம் பெண் தேடும் இந்த போட்டியில் இவரும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். இவர் தனக்கு நடிகர் ஆர்யா மீது காதல் இருக்கிறது என கூறி அவரை சுற்றி சுற்றி வந்தார்.

ஆனால் இவர் மேல் ஆர்யாவிற்கு பெரிதும் ஈர்ப்பு இல்லாததால் போட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியும் தனக்கு நடிகர் ஆர்யாவை காதலித்து வருகிறேன் என கூறி வருகிறார் அப்ரணதி. நடிகர் ஆர்யாவிற்கு திருமணமாகி பிறகு இன்னும் அவரின் நினைப்பில் இருந்து அப்ரணதி மீளவில்லை என அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
ஆம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பெயரை ” அபர்ணாதி 6யா ” என வைத்துள்ளார். இதனை பார்த்த பலரும் இவர் ஆர்யாவை கணவராக நினைத்துக்கொண்டு இருக்கிறாரா என சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மேலும் இவர் தற்போது இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் ஜெயில் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.