இன்னும் சில மாதங்கள் கழித்து என்னைப்பற்றி கிசுகிசு எழுத வேண்டிய அவசியம் இல்லாத அளவுக்கு என் வாழ்க்கையில் ஒரு சம்பவம் நடக்க இருக்கிறது. பொறுத்திருந்து பாருங்கள்’ என்று ஒரு ஹாட் சஸ்பென்ஸ் வைக்கிறார் நடிகை ஓவியா.
எனக்கும், ஆரவுக்கும் இடையேயான உறவு குறித்து பேசியுள்ளார் ஓவியா. பிக் பாஸ் வீட்டில் இருந்த போது ஓவியாவுக்கு ஆரவ் மீது காதல் வந்தது. நிகழ்ச்சி முடிந்த பிறகு ஆரவும், ஓவியாவும் ஜோடியாக ஊர் சுற்றுகிறார்கள். ஜோடியாக வெளிநாட்டிற்கு சென்று வருகிறார்கள். அவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் ரசிகர்களின் விருப்பம். இந்நிலையில் ஓவியா பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. என்னை தேடி வரும் பட வாய்ப்புகளை எல்லாம் நான் ஒப்புக் கொள்வது இல்லை. எனக்கு பிடித்தால் மட்டுமே ஒப்புக் கொள்கிறேன். என் சினிமா பயணத்தை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க விரும்பவில்லை. நான் எடுக்கும் முடிவுகள் எனக்கு திருப்தி அளிக்கின்றது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தற்போது சினிமாவில் பிசியாகுபவர்களை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். என்னை தேடி பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றனன. சில படங்களை நான் தேர்வு செய்துள்ளேன். எனக்கும் ஆரவுக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. எனக்கு அவர் மீது அக்கறை உள்ளது. அவருக்கும் என் மீது அப்படி தான். அவர் அவரின் கெரியரில் கவனம் செலுத்தி வருகிறார். நான் என் படங்களில் கவனம் செலுத்துகிறேன். இந்த உறவுக்கு பெயர் நட்பு என்று நான் கூற மாட்டேன். ஏதாவது இருந்தால் நான் கண்டிப்பாக அனைவருக்கும் தெரிவிப்பேன்.
களவாணி 2, காஞ்சனா 3, 90 எம்எல் ஆகிய மூன்று படங்களுமே வித்தியாசமானவை. காஞ்சனா 3 படத்தில் நான் காமெடி செய்துள்ளேன். காமெடி பண்ணுவது எளிது அல்ல. 90 எம்எல் படத்தில் ஒரு ஹீரோ செய்யும் அனைத்தையும் செய்துள்ளேன் என்று ஓவியா தெரிவித்துள்ளார். படங்களில் நடித்து முடித்தபின் ஆரவ், ஓவியா திருமணம் குறித்து அவரிடம் இருந்து ஒரு நல்ல பதிலை எதிர்பார்க்கலாம் என தெரிகிறது.