இந்த ஹாலிவுட் படம் போல தான் கமல் 232 படம் இருக்குமாம்! வெளியான தகவல்..

தமிழ் சினிமாவில் தற்போது வளந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் மற்றும் கைதி உள்ளிட்ட படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தான் மாஸ்டர். கொரோனா காரணமாக தள்ளிப்போன இப்படத்தின் ரிலீஸ் 2021 ஆம் ஆண்டின் பொங்கல் அன்று திரைக்கு வரும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உலகநாயகன் கமலை வைத்து கமல் 232 திரைப்படத்தை இயக்கவுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமலின் வெறித்தனமான பேன் என்பதால் மிக பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் கமல் ஹாசனுக்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க போகிறார் என தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் இது குறித்து இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.

கமல் ஹாசனின் 60 வருட நிறைவு நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கமல் ஹசனிடம் கேட்பார். மேலும் இப்படம் பிரபல ஹாலிவுட் திரைப்படமான ‘ஜான் விக்’ திரைப்படம் போல் உச்சகட்ட ஆக்ஷன் தில்லராக இருக்கும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக தான் நடிகர் கமல் தாடியும் மீசையுமாக தனது கெட்டப்பை மாற்றிக்கொண்டுள்ளாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!