இந்த வெற்றியைப் பார்க்க அவர் உயிரோடு இல்லையே..!! ஒரே நாளில் பெரும் வசூல் சாதனை..!!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது மற்றும் அவர்களது ரசிகர்களிடையே ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவம் நாடு முழுக்க பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியது. அவரின் மரணம் குறித்து பல விவாதங்களும் சர்ச்சைகளும் எழுந்தன. ஆனால் இறுதியில் மனஅழுத்தமே காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.

அவரின் மரணத்தில் இன்னும் சந்தேகமே நீடித்து வருகிறது. இதுகுறித்து மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்று உள்ளனர். இந்நிலையில் அவரின் தந்தை சுஷாந்தின் முன்னாள் காதலியின் மீது சந்தேகித்து அடுக்காக பல புகார்களை காவல் நிலையத்தில் பதிவு செய்துள்ளார். சுஷாந்த் கடைசியாக நடித்திருந்த தில் பேசற படம் ஓடிடி தளத்தில் அண்மையில் வெளியானது. இப்படம் வெளியாகி 24 மணி நேரத்தில் 95 மில்லியன் பார்வைகளை அள்ளியது.

இதனை கணக்கிட்டு வசூலுடன் ஒப்பிடுகையில் ரூ 2 ஆயிரம் கோடி என சொல்லப்படுகிறது. ஒரே நாளில் இப்படி பெரும் வசூல் சாதனை செய்திருக்கிறது. ஆனால் அதை கொண்டாட அவரும் இல்லை, அவரின் ரசிகர்கள், ரசிகைகளும் மிகுந்த வருத்தத்தில் இருக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான் இதை பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.