இந்த புகைப்படத்தில் தன் அப்பாவை எட்டிப்பார்க்கும் குட்டிப்பையன் யார் தெரியுமா? – அட தற்போது சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகருங்க..!

தமிழ் சினிமாவில், சமீபகாலமாக படத்தோடு ஒன்றிய காமெடி காட்சிகளில் சிறப்பாக நடித்து வருபவர் சதீஷ் முத்துகிருஷ்ணன். 35-வயதான சதீஷ் தொடக்கத்தில் கிரேசி மோகன் அவர்களின் மேடை நாடக நிறுவனத்தில் எட்டு ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வந்துள்ளார். மேலும் அதில் இணை எழுத்தாளராகவும் பணிபுரிந்து வந்த சதீஷ் அந்த நாடகங்களில் சாக்லேட் கிருஷ்ணா எனும் இவர் நடித்த கதாபாத்திரங்கள் வெகு பிரபலம்.

இந்நிலையில் மேடை நாடகத்தை தொடர்ந்து வெள்ளித்திரையில் பொய் சொல்ல போறோம் எனும் திரைபடத்தில் பிரபல இயக்குனர் எ.எல் விஜயுடன் இணை வசன கர்த்தாவாக தன் திரைபயனத்தை தொடங்கினர். 2010-ம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியான மதராசபட்டினம் திரைபடத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்த சதீஷின் நடிப்பு மக்களிடையே பேரம் வரவேற்பை பெற்றது. இதன் மூலம் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பினை பெற்றார்.

மேலும் இவர் எதிர்நீச்சல் படத்தில் காமெடியனாக உருவேடுத்த சதீஷ் இதை தொடர்ந்து பல்வேறு படங்களில் காமெடி நடிகராகவும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். பல முன்னணி நடிகர்களுடன் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளார். இப்படி இருக்கையில் இவர் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் அவர்களை திருமணம் செய்து கொண்டதாக வதந்திகள் சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டது.

இவ்வாறு தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் சதீஷ் அவர்களின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைராளாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் சிறு வயதில் தனது அப்பா அம்மாவுடன் கொடுத்த போசை போலவே தற்போது வளர்ந்த பிறகும் அதை அப்படியே செராக்ஸ் எடுத்தது போல் போஸ் கொடுத்து அந்த புகைபடத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.