இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யாரு தெரியுமா? அப்பவே அழகா இருக்காங்களே! வைரலாகும் புகைப்படம்

கோலிவுட் சினிமாவுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களை நடித்துள்ளார். தமிழில் தனது முதல் படமான பழனி படத்தில் நடிகர் பரத் அவர்களுடன் இணைந்து நடித்து பல ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளார். தமிழ் திரையுலகில் நான் மஹான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, விவேகம் மற்றும் தற்போது உலக நாயகன் கமல் ஹாசன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இவர் பிறகு படிப்படியாக பல படங்களில் வாய்ப்பு கிடைத்து தற்போது முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் அவரது அற்புதமான நடிப்பினால் மட்டுமின்றி, அழகாலும் ஏராளமான ரசிகர், ரசிகைகளைக் கொண்டுள்ளார். காஜல் அகர்வால் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் லைவ் டெலிகாஸ்ட் எனும் வெப் தொடர் ஒன்றில் நடித்துள்ளார்.

 

நடிகை காஜல் அகர்வாலின் பல புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வைரலாவதுண்டு. அந்த வகையில் நடிகை காஜல் அகர்வாலின் சிறு வயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம் தற்போது வெளியாகியுள்ள இப்புகைப்படம், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் என சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published.