இந்த புகைப்படத்தில் இருக்கும் குட்டி பாப்பா இந்த நடிகை தானா? வாயடைத்துப் போன ரசிகர்கள்- வைரலாகும் புகைப்படம்

இணையத்தில் ஒரு குழந்தையின் புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்தக் குழந்தை இப்போது பிரபல நடிகை. அது யார் எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்போது நாயகியாக வலம் வருபவர் நடிகை ஸ்ரீதிவ்யா. தெலுங்கானாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் தெலுங்குத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 2013ம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் லதா பாண்டி கேரக்டரில் நடித்தார்.

அந்தப் படம் பெரிய அளவில் ஹிட் அடித்தது. அதன் பின்னர் தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றார். ஜீவா, கக்கிச்சட்டை, மருது, வெள்ளைக்காரத்துரை என தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்து நடித்தார். ஸ்ரீதிவ்யா துளியும் கவர்ச்சி காட்டாமல் ஹோம்லி கேரக்டரில் நடிப்பதால் கவனத்துக்கு உள்ளானார். அதனால் சில ஹோம்லி சப்ஜெட் திரைப்படங்கள் தேடிவந்தன.

அண்மைக்காலமாக சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீதிவ்யா, தன் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் நடிகை ஸ்ரீதிவ்யாவின் குழந்தைப் பருவ புகைப்படத்தை அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். ஆம் இந்தக் குழந்தை நடிகை ஸ்ரீதிவ்யா தான். ஸ்ரீதிவ்யா இப்போது அதர்வாவுக்கு ஜோடியாக ‘ஒத்தைக்கு ஒத்தை’ என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published.