ரம்யா கிருஷ்ணன், ஒரு இந்திய திரைப்பட நடிகை. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் 260 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ரம்யா நான்கு பிலிம்பேர் விருதுகள், மூன்று நந்தி விருதுகள் மற்றும் ஒரு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை வென்றுள்ளார். நாயகியாகவும் குணச்சித்திர வேடங்களிலும் வில்லியாகவும் நடித்து பிரபலமானவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
இவர், தமிழ் சினிமாவின் படையப்பா படத்தில், வில்லியாக நடித்து ஒட்டு மொத்த சினிமாவையும் திரும்பிப் பார்க்க வைத்தார். வயசானாலும் இன்னும் ஸ்டைலும் அழகும் அப்படியே இருக்கு என்ற டயலாக் இதற்கு ஏற்றவகையில் இன்னமும் இளமையாக இருந்து வருகிறார். பிரபல இயக்குனர்களான கே.பாலசந்தர், பிரியதர்ஷன், யஷ் சோப்ரா, மகேஷ் பட், பாலு மகேந்திரா, கே. விஸ்வநாத், கே.ராகவேந்திர ராவ் மற்றும் எஸ்.எஸ்.ராஜமௌலி ஆகியோருடன் பணியாற்றிய பெருமையும் இவருக்கு உண்டு.
தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பள்ளிப் பருவத்தில் கண்ணாடி அணிந்துப்படி அடையாளம் தெரியாத அளவிற்கு இருந்துள்ள பழைய நினைவுகளின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக ப ரவி வரும் நிலையில், அப்படி இருந்த அவரா இன்று இப்படி இவ்வளவு அழகாக இருக்கிறார்? என ரசிகர்கள் வி யந்துபோயுள்ளனர்.