இந்த குழந்தையை பார்த்துள்ளீர்களா ..?இவர் தற்போது தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக உள்ளார் .

பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் சூப்பர் சிங்கர் சீசன் 7 இல் மா.கா.பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கினர்,சிவாங்கி அதில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார், அந்த நிகழ்ச்சியில் அவர் வெளியில் அவ்வளவாக தெரியவில்லை, இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நிறைவு பெற்றது அதன் பின் பல சீசன் -கள் நடந்தன நன்றாக பாடி ஒரு சிலர் மட்டுமே ஜொலித்தனர்.

அதன்பின் சில வருடங்கள் கழித்து அதே பிரபல தொலைக்காட்சியில் “குக் வித் கோமாளி ” என்னும் நகைச்சுவை நிறைந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றார் அந்த நிகழ்ச்சி ஆரம்ப முதலே நல்ல வரவேற்பை பெற்றது ,இதில் சிவாங்கி பெரிதும் பேசப்பட்டார் இதனால் இவருக்கு பின்னணி பாடகி வாய்ப்பு கிடைத்துவிட்டது ,நகைச்சுவை நாயகி வாய்ப்பும் கூடிய விரைவில் கிடைத்துவிடும் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றது .

இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார் ,இதுமட்டும் இன்றி பல ஆல்பம் சோங் கூட பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது ,சற்று நேரத்துக்கு முன் இவரின் சிறிய வயது புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது ,சிவாங்கியின் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை அவர்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து வருகிறார்கள் .