இந்த குட்டி பொண்ணு யாரு தெரியுமா..? – இவங்க பிரபல நடிகை மற்றும் பிரபல நடிகரின் மனைவியும் கூட..!!

தமிழ் சினிமாவிற்கு நடிகைகளின் வரத்து நாளுக்கு நாள் அதிகமாக உள்ளது என்று தான் சொல்ல வேண்டும், அந்த வகையில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான “வனமகன்” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை சாயீஷா அவர்கள். மேலும், இதன்பின், கடைக்குட்டி சிங்கம், காப்பான், ஜூங்கா, கஜினிகாந்த், டெடி உள்ளிட்ட பல படங்களில் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வருகிறார்.

காப்பான், கஜினிகாந்த் படங்களில் நடித்தபோது ஆர்யா, சாயிஷா இருவரும் இடையே காதல் மலர்ந்தால், கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். சமீபத்தில் தான், இந்த காதல் தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், இன்று நடிகர் ஆர்யாவின் மனைவியும், நடிகையுமான சாயீஷாவிற்கு பிறந்தநாள்.

இதற்காக, திரையுலகை சேர்ந்த பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகை சாயீஷாவின் சிறு வயது புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் உலா வருகிறது. இதோ அந்த புகைப்படம்…