இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுவார் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளதற்கு இந்திய மக்கள் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளனர். அமைதியின் பேரில் விங் கமாண்டர் அபிநந்தனின் விடுதலை நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரதமர் இம்ரான் கான் கூறியதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆர்ப்பரித்தனர். இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமரின் இந்த முடிவுக்கு இந்திய மக்கள் தங்கள் டுவிட்டர் பக்கங்களில் நன்றி தெரிவித்துள்ளனர், எங்கள் குடிமகனை விடுவிப்பதன் மூலம் நீங்கள் ஒரு ஹீரோ என நிரூபித்துவிட்டீர்கள் என டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். மேலும், அரசியல் தலைவர்களும் வரவேற்பு அளித்துள்ளனர்.
@ImranKhanPTI Huge Respect Sir!! #SayNoToWar pic.twitter.com/AeLMgh3I5z
— Kavitha Gajendran (@kavithazahir) February 28, 2019