இந்திய எல்லையில் பிறந்தநாள் கொண்டாடிய ராணுவ வீரர்!! எதுல கேக் செஞ்சு வெட்டுறாங்கன்னு பாருங்க- வைரல் வீடியோ

பொதுவாக நமக்கெல்லாம் பிறந்தநாள் வந்தால் அந்த வாரமே கூடுதல் உற்சாகம் அடைந்துவிடுவோம். புது ஆடை வாங்குவது முதல் ஒவ்வொன்றையும் பார்த்து, பார்த்து செய்வோம். ஆனால் இந்திய எல்லையில் வெயில், மழையை பொருட்படுத்தாமல் நமக்காக உழைக்கும் ராணுவ வீரர்களுக்கு அப்படியான சூழல் இல்லை. அவர்களது பிறந்தநாளுக்கு குடும்பத்தினரோடு தொலைபேசியில் பேச முடிந்தாலே சாதனை என்று சொல்லிவிடலாம். இப்படியான சூழலில் அங்கு பாபு என்னும் ராணுவ வீரருக்கு பிறந்தநாள் வந்தது. அவர்களிடம் வெட்ட கேக் இல்லை. உடனே அவர்கள் பணி செய்யும் இடத்திலேயே பனிக்கட்டியை கேக்காக மாற்றி அதை புல் திருந்தும் கம்பியால் வெட்டுகிறார் பாபு. சக நண்பர்கள் புகைப்படத்தின் போஸிற்காக அந்த பனிக்கட்டியை பாபுவின் வாயில் ஊட்டுகிறார்கள். குறித்த இந்தக் காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published.