பாகிஸ்தான் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட அபிநந்தன் வாஹா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். கடந்த 27ம் திகதி இந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் போர் விமானத்தை விரட்டி கொண்டு சென்றபோது, விபத்தில் சிக்கிய அபிநந்தன் பாராசூட் மூலம் பாகிஸ்தான் எல்லைக்குள் சிக்கிக்கொண்டார். அங்கு அவரை கைது செய்த பாகிஸ்தான் ராணுவத்தினர் அமைதியை நிலைநாட்டும் விதமாக இந்தியாவிடம் இன்று ஒப்படைப்பதாக அறிவித்தனர். அதன்படி இன்று காலை முதலே வாகா எல்லையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடி அவரது வருகையை பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று பாகிஸ்தானின் லாகூர் வரை விமானம் மூலம் அழைத்து வரப்பட்ட அபிநந்தன், லாகூரில் இருந்து இந்தியா, பாகிஸ்தான் எல்லையான வாகா பகுதிக்கு கார் மூலம் அழைத்து வரப்பட்டார். இருநாட்டு சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து அபிநந்தன் இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டார்.
அட்டாரி எல்லைக்கு வந்த அபிநந்தனை இந்திய ராணுவத்தினர் வரவேற்றனர். அங்கு அவரை பார்த்த பொதுமக்கள் அனைவரும் சந்தோசத்தில் பலத்த கோஷங்களை எழுப்ப ஆரம்பித்தனர். 70 மணி நேரம் பாகிஸ்தான் சிறையில் இருந்த அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம்.
பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்புக்கு பின்னர் இந்தியா வசம் ஒப்படைத்தது. அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன.வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ