தமிழ் சினிமாவில் புதிதாக தொடங்கப்பட்டு படு வெற்றிகரமாக ஓடிய நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் சீசனில் கலாட்டா, சண்டை, காதல், கலகலப்பு என எல்லாம் சேர்ந்த கலவையாக இருந்தது. இரண்டாவது சீசன் அவ்வளவாக மக்களிடம் நல்ல வரவேற்பை பெறவில்லை என்பது தான்

உண்மை. முதல் சீசனில் காதலர்களாக ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டவர்கள் ஆரவ்-ஓவியா. நிகழ்ச்சிக்கு பிறகு ஜோடியாவார்கள் என்று பார்த்தால் நல்ல நண்பர்கள் தான் நாங்கள் என்றனர். அதன் பின்பும் பல சர்ச்சைகள் இவர்களை சுற்றி வந்த வண்ணம் இருந்தது, குறிப்பாக இருவரும் பல இடங்களில் சுற்றி திரிவது போன்றும் புகைப்படங்கள் வெளிவந்தன. அதை இருவரும் மறுத்த நிலையில் கடந்த பிக் பாஸ் சீசனில் கூட இருவரும் முகம் கொடுத்து பேசவில்லை.
அதேசமயம் படத்திலாவது இவர்கள் இணைந்து நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆசைப்பட்டார்கள். அது இப்போது நடந்துவிட்டது, ஆரவ் நடிக்கும் ஒரு படத்தில் ஓவியா நடித்துள்ளாராம். அதுவும் சிறப்பு வேடத்தில் கண்டிப்பாக ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சியாக இருக்கும் என ஆரவ் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
. @OviyaaSweetz does a cameo in @Nafeez_Arav’s #RajaBheema https://t.co/P4JTxUWT9M pic.twitter.com/ns71h5lelv
— Chennai Times (@ChennaiTimesTOI) December 13, 2018