தொகுப்பாளினியாக இருந்த டிடி நடிகையாக மாறியவர்.பல ஆண்டுகளாக விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். அவரது பர்சனல் வாழ்க்கையில் பல சோகங்கள் இருந்தாலும் அவற்றை மறந்துவிட்டு சற்று மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்து வருகிறார்.

தற்போது பல படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் டிடி. மேலும், கேரள ரொமான்ஸ் ஸ்டார் டொவினோ தாமசுடன் கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு காதல் பாடலில் கூட ரோமான்ஸில் அசத்தி இருந்தார் dd. அதுபோக விக்ரம் நடித்து வரும் துருவநட்சத்திரம் படத்திலும் நடித்து வருகிறார்.
இதையும் படியுங்க : கண்ணை என்ன பண்ணீங்க – DD வெளியிட்ட போட்டோவை கிண்டல் செய்த ரசிகர்கள்தனது காதல் கணவருடனான விவாகரத்திற்கு பிறகு டிடியின் வாழ்க்கையில் மீண்டும் புத்துணர்ச்சி பூக்க துவங்கி உள்ளது. கணவருடன் ஏற்பட்ட பிரிவிற்கு பிறகு சிறிது காலம் பொது நிகழ்ச்சியில் கலந்துகொல்லாத அதன் பின்னர் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார்.
சமீபத்தில் விஜய் டிவியில் 20 ஆண்டுகள் DD நிறைவு செய்ததை ஒட்டி அவருக்கு பல்வேறு பாராட்டுகளும் குவிந்தது. சமீபத்தில் DD தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அவரது பிறந்தநாள் என்பதால் அவருக்கு வாழ்த்துக்களையும் கூறியுள்ளார் DD.