“இது என்ன மெண்டல் ஹாஸ்பிடல் ட்ரெஸ்”..?? சேலை அழகி ரம்யா பாண்டியனை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!! வைரலாகும் புகைப்படம் உள்ளே..

நடிகை ரம்யா பாண்டியன், தமிழ் நாட்டில் நடிகைகளிடையே மீண்டும் சேலை கலாச்சாரத்தை கொண்டுவந்த பெருமை சேர்த்தவர் என்று தான் சொல்ல வேண்டும். இடுப்பு மடிப்பு தெரிய, படு க வர்ச்சியாக சேலை அணிந்து அவர் பதிவிட்ட புகைப்படங்கள் எல்லாம், இளசுகளின் மொபைல் வால்பேப்பராகின.

வைரசுக்கே வைரல் பீவர் வரும் அளவுக்கு வைரலாகின. ரம்யா பாண்டியனின் புகழ் ஓவர் நைட்டில் இந்திய தேசமெங்கும் பரவியது. சமூக வலைதளங்களில் ரம்யாவின் பெயரில் ஆர்மி ஆரம்பிக்க போட்டோ போட்டியே நடந்தது. ஒரு நாளில் இண்டெர்நெட்டின் சென்சேஷனாக மாறினார் நம் சேலை அழகி.

அந்த புகைப்படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என அவரே கனவிலும் நினைத்திருக்க மாட்டார். ஜோக்கர், ஆண் தேவதை என நல்ல படங்களில் நடித்தும், அதிக பட வாய்ப்புகள் வரவில்லையே என்ற கவலை அவருக்கு மறைந்தது. குக் வித் கோமாளி, நகைக்கடை விளம்பரங்கள் என ரம்யா இப்போ செம பிஸி.

ஆனாலும், அவ்வபோது போட்டோஷூட்கள் நடத்தி ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். அந்த வகையில் தற்போதும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இது என்ன மெண்டல் ஹாஸ்பிடல் ட்ரெஸ் மாதிரி இருக்கு என க லாய்த்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.