இணையத்தில் வெளியான நவரச நாயகன் கார்த்தியின் அரிய குடும்ப புகைப்படம்- இதோ..

தமிழ் சினிமாவின் நவரச நாயகனாக வளம் வந்தவர் நடிகர் கார்த்திக். பிரபல முன்னணி இயக்குனர் பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் கார்த்திக். அதன் பின்னர் நினைவெல்லாம் நித்யா, ஆகாய கங்கை, மௌன ராகம், அக்னி நட்சத்திரம், கிழக்கு வாசல் என பல வெற்றி படங்களில் முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முக்கிய கதாபாத்திரத்தில் 125 அதிகமான படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் 80களில் தனது சினிமா பயணத்தை தொடங்கி இப்போதும் கலக்கி வருபவர் கார்த்திக். நவரச நாயகனாக வலம் வந்த இவரது படங்கள் அதிகம் ரசிகர்களிடம் பேசப்பட்டிருக்கிறது. தொடர்ந்து சினிமாவில் வலம் வருவார் என்று பார்த்தாலும் இடையில் அரசியலில் இறங்கினார். பின் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி சில படங்களே நடித்தார்.

இவரின் மகன் கௌதம் கார்த்திக் தற்போது தமிழ் வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவராக திகழ்கிறார். இப்போது நவரச நாயகன் கார்த்தியின் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் கார்த்திக் தனது மனைவி, இரண்டு மகன்களுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ அவரது அழகிய குடும்பத்தின் புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published.