இதன் காரணமாக தான் கடல் நீர் நீல நிறத்தில் இருக்கிறதா? இவளோ நாள் இது தெரியாம போச்சே..!

வானின் வெளிச்சம், தண்ணீரில் கரைந்துள்ள துகள்களின் அடர்த்தி, கடலின் ஆழம், பார்வையாளரின் பார்வைக் கோணம் இவையெல்லாம் சார்ந்து தான் கடல் நிறமளிக்கும். சூரிய ஒளியானது (அதாவது வெண்மையான ஒளி…) கடல் நீரில் விழும் போது, சில வண்ணங்கள் உட்கிரகிக்கப்பட்டு விடும். மற்ற வண்ணங்கள் தண்ணீரின் மூலக் கூறுகளில் மோதி சிதறடிக்கப்படும். அதாவது, சிவப்பு மற்றும் அகச்சிவப்பு கதிர்கள் உறிஞ்சப்பட்டு, நீலம் மற்றும் பச்சை வண்ணங்கள் மட்டும் பெரும்பாலும் சிதறடிக்கப்படும்.

இதன் காரணமாகவே பச்சை கலந்த நீலம் அல்லது நீல நிறத்தில் கடல் நீர் தோற்றமளிக்கின்றது. இது போன்று ஒளிச்சிதறல் அடைய அந்த நீரின் ஆழம் குறைந்தது 10 அடியாவது இருக்க வேண்டும். கடலின் ஆழம் கூடக் கூட நீல நிறம் அடர்த்தியாகத் தெரியும். வானத்தின் நிறத்தையும் சேர்த்துப் பிரதிபலிக்கும். ஆனால் அதனால் மட்டும் தான் நீல நிறம் என்று சொல்ல முடியாது. சரி இப்பொழுது, செடிகொடி மற்றும் மனிதர்களுக்கு வருவோம். இங்கும் அதே கதை தான். நிறம் என்பது ஒரு பொருளின் மேல் விழும் வெண்மை ஒளியில் (வெண்மை என்பது எல்லா நிறங்களின் தொகுப்பு) உட்கிரகிக்கப்படாமல் சிதறடிக்கப்படும் ஒளி ஆகும்.

அதாவது 7 நிறங்கள் கொண்ட ஒரு வெண்மை ஒளி ஒரு பொருளில் பட்டு அது பச்சை நிறத்தில் தெரிகின்றது என்றால் அந்தப் பொருள் பச்சை நிறத்தைத் தவிர மற்ற வண்ணங்களை உறிஞ்சிக் கொண்டது என்று பொருள். ஆக, உலகில் நாம் பார்க்கும் வண்ணங்கள் எல்லாம் உறிஞ்சப் படாமல் சிதறடிக்கப்பட்டு நம் கண்களை அடையும் ஒரு குறிப்பிட்ட அலை நீளங்கள் கொண்ட ஒளிக் கதிர்களே.

Leave a Reply

Your email address will not be published.