கஸ்தூரி மான் படத்தில் ஒரு குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய சாய்பல்லவி தொடர்ந்து ஜெயம் ரவி மற்றும் கங்கானா ரனாவத் நடித்து வெளியான தாம் தூம் படத்தில் ஒரு சிறுகதாபாத்திரத்தில் நடித்தார். அதை தொடர்ந்து எழுவருட இடைவேளைக்கு பின் ப்ரேமம் படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
மலர் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் நிவின் பாலியுடன் நடித்து வெளியான இந்த படம் சாய்பல்லவிக்கு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி படமாக அமைந்தது. சென்னையில் இந்த படம் வெளியாகி இங்கும் வெற்றி பெற்றது. தொடர்ந்து தெலுங்கில் இவர் நடித்து வெளியான பிடா படமும் இவருக்கு வெற்றி படமாக அமைந்ததால் தொடர்ந்து சாய்பல்லவின் தென்னிந்தியாவின் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
தமிழில் இவர் தற்போது சூர்யாவுடன் ஒரு படத்திலும் மாறி படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் மாறி படத்தின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.
அந்த வங்கியில் சற்றே கவர்சியாக நடித்திருக்கும் சில புகைப்படங்களும் வெளியாகி இருக்கின்றன. தற்போது ரசிகர்கள் இந்த புகைப்படங்களை லைக்ஸ்களுடன் இணையத்தில் பரப்பி ரசிகர்கள்.