விஜய் டிவியில் மக்கள் விரும்பி பார்க்கப்படும் நிகழ்ச்சிதான் பிக் பாஸ். இந்நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் 4 நிகழ்ச்சி இந்த ஆண்டு நடக்குமா, நடக்காதா? என்று பேசப்பட்ட நிலையில் ப்ரொமோ வீடியோ வெளியாகி பார்வையாளர்களை கவர்ந்தது. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் துவங்க முடிவு செய்துள்ளனர். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போது ஒளிப்பரப்ப படுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஹிந்தியில் 14வது சீசன் பிரபலங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். தமிழில் அக்டோபர் 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று போட்டியாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகவும், திங்கள் கிழமை முதல் பிக்பாஸ் வீட்டின் நிகழ்வுகள் ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகிறது. அடுத்தடுத்து வெளியாகும் புரமோக்களில் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிக்பாஸ் ஒளிபரப்பு தேதி குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனை போன்று இருந்தால் மாஸ் இல்லாட்டி லாஸ் என்டோமால் ஷைனுக்கு என்றும் ஐபிஎல் வெர்சஸ் பாஸ் என்றும் கூறி வருகின்றனர். இன்னும் சில நெட்டிசன்கள் பிக்பாஸ் தேதியை கேட்டு டான்ஸ் ஆடும் ஜிஐஎஃப் வீடியோவையும் பகிர்ந்து வருகின்றனர்.