இணையத்தில் வைரலாகும் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவியின் சிறு வயது புகைப்படம்..!!

சிவகார்த்திகேயன் ஒரு திரைப்பட நடிகர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் சிவகார்த்திகேயன். எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் தனது தனித் திறமையால், தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்துள்ளார் சிவகார்த்திகேயன். தமிழ் திரையுலகில் பாண்டியராஜ் இயக்கிய மெரினா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் சிவகார்த்திகேயன் . பின்னர் தனுஷ் நடித்த படம் 3 இல் அவர் ஒரு துணை வேடத்தில் நடித்தார்.

பெற்றோர் மீது கொண்ட அதீத பாசத்தினால் தனது அம்மா விருப்பப்பட்ட பெண்ணை திருமணமும் செய்து கொண்டார். ஆர்த்தி வசதியான பெண் என்றாலும் கூட சிவகார்த்திகேயன் தடுக்கி விழும் போதெல்லாம் வாழ்க்கையில் கை கொடுத்து தூக்கி தனக்கென்று பக்கபலமாக இருக்கிறார், இதனை பல மேடையில் பகிர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன்.

பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஆராதனா என்னும் ஓர் அழகிய மகள் உள்ளார். இவர்கள் இருவரும் சிறு வயதில் இருந்து நெருங்கிய நண்பர்கள். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படம், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.