சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் ஜொலிக்கும் நடிகர் தான் சந்தானம். லொள்ளு சபா நிகழ்ச்சியில் நகைச்சுவை கலைஞராக அறிமுகமானார். அதன் பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராக பணியாற்றினார். விஜய் தொலைக்காட்சியில் வந்தாலே வெற்றிபெறலாம் என்பதற்கு உதாரணமாக நடிகர் சிவகார்திகேயன், நடிகர் சந்தானம், நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கர் மற்றும் தற்போது கண்ணும் காணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் ரக்க்ஷன் என பலரை கூறலாம்.

மன்மதன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் வெள்ளித்திரையில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்தார். மேலும் காமெடி நடிகராக நடித்து வந்தது போதும் என ஹீரோவாக களமிறங்கி தற்போது எண்டர்டெயின்மெண்ட் ஹீரோவாக கலக்கி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான தில்லுகு துட்டு 1 2, ஏ 1 ஆகிய படங்கள் வசூலில் கூட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் தற்போது இவர் பிஸ்கொத்து, டிக்கிலோனா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இவரின் வெறித்தனமான லுக் போட்டோ ஒன்று சமூக வலைதள பக்கத்தில் வெளிவந்துள்ளது. இதை பார்த்த பலரும் என்னது இது நடிகர் சந்தனமா என கேட்டு வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்..