நடிகை ஹன்சிகா மோத்வானி தென்னிந்திய திரையில் முதல் முதலில் கால் வைத்தது தெலுங்கு படம் மூலமாக தான். அதைத்தொடர்ந்து, சில தமிழ் படங்களிலும் நடித்து தமிழில் முன்னணி கதாநாயகியாக வந்தார்.சின்ன குஷ்பு என்ற பெயரை எடுத்த ஹன்ஷிகா, தொடர்ந்து பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். ஆனால் தற்போது அவருக்கு பெரிதாக எந்த படங்களும் அமையவில்லை.

கடைசியாக நடித்த குலேபகாவலி படத்தை தொடர்ந்து எந்த படத்திலும் ஹன்ஷிகா ஒப்பந்தமாகவில்லை என்று கூறி வந்த போது, அண்மையில் அவர் துப்பாக்கி முனை படத்தில் நடித்திருந்தார்.. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக விக்ரம் பிரபு நடித்திருந்தார் . தாணு தயாரிப்பில் உருவான இந்த படமும் பெரிதாக வரவேற்ப்பை பெறவில்லை
ஹன்சிகாவுக்கு தமிழில் படங்கள் இல்லாதநிலையில் மார்க்கெட் இல்லாத விக்ரம்பிரபுவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என சிலர் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் ஹன்சிகா தற்போது ஒரு புகைப்படத்தில் மிகவும் மெலிந்த தோற்றத்தில் காணப்படுகிறார். ஆனால், என்ன அனது என்று தெரியவில்லை தற்போதெல்லாம் இவர் மார்க்கெட் அதள பாதளத்திற்கு சென்றுவிட்டது.
இதனால் திடீரென இவரது கவர்ச்சி புகைப்படங்கள் வெளிவந்து இழந்த மார்கெட்டை மீண்டும் பிடிக்க முயற்சி செய்கிறார் என்ற செய்தி பரவியது. இந்த நேரத்தில் ஹன்சிகா ஒரு பதிவு டுவிட்டரில் போட்டுள்ளார். அதாவது அவரது மொபைல் மற்றும் டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாம், விரைவில் சரி செய்யப்படும். ஆனால் இதற்கு நடுவில் ஏதாவது தகவல்கள் என் எண்ணில் இருந்து வந்தால் பதில் அளிக்காதீர்கள் எனவும் தெரிவித்திருக்கிறார்.