இட்லி கடை சிறுவனுக்கு உதவிய தல அஜித்! வெளியான தகவல்- பாராட்டும் இணையவாசிகள்!

அஜித்தின் உதவும் குணம் பற்றி எல்லோருக்குமே தெரியும். அவர் செய்யும் உதவிகள் வெளி உலகத்துக்கு வருவதில்லை. அதற்கு முக்கிய காரணம், தான் செய்யும் உதவி வெளியே தெரிவதை அஜீத் விரும்புவது இல்லை. தற்போது, வலிமை படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்நிலையில் அவர் வாரணாசியில் சந்தித்த ஒரு இட்லி கடை சிறுவனின் படிப்பு செலவை ஏற்றிருக்கும் தகவல் இப்போது வெளிவந்திருக்கிறது.

ஐதராபாத்தில் வலிமை படப்பிடிப்பில் இருந்த அஜித், படப்பிடிப்பை முடித்துக் கொண்டு அங்கிருந்து சிக்கிமிற்கு பைக் பயணம் மேற்கொண்ட செய்தி பரவலாக வெளியானது. இந்த பைக் பயணத்தில் ஒரு தமிழர் நடத்தும் இட்லி கடையை தேடிப்பிடித்து சாப்பிடச் சென்றுள்ளார். அப்போது அந்த கடையில் ஒரு சிறுவன் வேலை செய்திருக்கிறான். அந்த சிறுவன் அஜித்தை அடையாளம் கண்டு அவரிடம் ஆட்டோகிராப் வாங்கி இருக்கிறான். அப்போது அந்த சிறுவன் இது என் அப்பா நடத்தும் கடை தான்.

கொரோனா காலத்தில் 6 மாதம் கடை பூட்டி இருந்ததால் மிகவும் வறுமை நிலைக்கு வந்து விட்டோம். பீஸ் கட்ட முடியாமல் எனது படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டேன் என்று கூறியிருக்கிறான். இதைக் கேட்ட அஜித் அவன் படிப்பு செலவை தான் ஏற்பதாக இட்லி கடைக்காரரிடம் கூறிவிட்டு சென்றதோடு. அந்த பகுதி லொக்கேஷன் மானேஜரை தொடர்பு கொண்டு அந்த சிறுவன் படிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறு கூறி விட்டுச் சென்றிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published.