இஞ்சினியர்களையே அசத்தும் அளவில் பறவையின் கூடுகள்.. மிக நுட்பமாக கூடுகள் கட்டும் அழகை பாருங்க!

பறவைகள் மட்டும் இல்லாவிட்டால் இந்த உலகம் இவ்வளவு இயற்கை வளங்கள் நிறைந்ததாக இருந்திருக்காது. எப்படி என்கிறீர்களா? காகம் தொடங்கி சகல பறவைகளும் சாப்பிட்டுவிட்டு எச்சம் போடுகிறது அல்லவா? பறவைகள் வெறுமனே நாம் வைக்கும் உணவுகளை மட்டுமே சாப்பிடுவது இல்லை. அவை மரங்களில் பழங்களையும் சாப்பிடும். அவை எச்சம் போடும் போது அந்த பறவைகளின் எச்சத்தில் விதைகளும் இருக்கும். அதன் மூலம் மரம், செடி கொடிகள் வளர்ந்து இந்த உலகம் இயற்கை சமநிலை அடைய பறவைகளும் காரணம் ஆகிறது. மனிதர்கள் தங்கள் வீட்டைக் கட்டிக்கொள்ள பெரிய, பெரிய சிவில் இஞ்சினியர்களை அழைத்து வருவார்கள். ஆனால் பறவைகள் தனித்தே தங்கள் வீட்டை அதாங்க கூட்டை அழகாக வடிவமைத்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!