இசை நிகழ்ச்சியில் குறும்பு செய்த எஸ்.பி.பி..! கண்ணீர் விட்ட பாடகி பிரியங்கா! தீயாய் பரவி வரும் காணொளி!!

தனது காந்த குரலினால் உலக மக்களைக் கட்டிப்போட்டு வைத்த பாடகர் எஸ்பிபி கடந்த 25ம் திகதி சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது குரல்கள் சமூகவலைத்தளங்களில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது. மேலும் ரசிகர்கள் பலரும் தங்களுக்கு பிடித்தமான அவரது பாடல்களை பகிர்ந்து சோகத்தை பகிர்ந்து வருகின்றனர். மேலும் எஸ்பிபி மக்கள் சொத்து என்றும் நினைவு இல்லம் கட்டவும் அவரது குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

மறைந்த பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் குறித்தும் அவருடன் பயணித்த நாட்களை குறித்து பிரபலங்கள் பலரும் தங்களது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். மாலை நேரத்தில் சால்வைகளை சாலை ஓரங்களில் வசிப்போருக்கு வழங்கிவிடுவார். பாடலில் மட்டுமல்ல மனிதாபிமானத்திலும் எஸ்பிபி எப்போதும் ஸ்பெஷல் தான் என்பதை இந்நிகழ்வு காட்டுகின்றது என்றும் அவரது பெயர் மட்டுமின்றி அவரது மனமும் பால் போன்று வெண்மையாகவும், தூய்மையாகவும் இருந்தது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் பாடகி பிரியங்காவுடன் அவர் இணைந்து பாடிய பாடல் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. அதில், நெகிழ்ச்சியில் பாடகி கண்ணீர் விடும் போது மிகவும் அருமையாக சிரிக்க வைத்துள்ளார். இந்த வீடியோ தற்போது மீண்டும் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *