இசை ஜாம்பவான் எஸ்.பி.பி மறைவிற்கு இரங்கல் தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..! உருக்கமான வீடியோ பதிவு

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களில் ஒருவர் எஸ்.பி.பி. இவர் ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். எம்.ஜி.ஆர் நடித்த படத்தில் ஆயிரம் நிலவே வா பாடல் இவரை எங்கேயோ கொண்டு சென்றது. அதோடு ரஜினி, கமல், விஜய், அஜித், சல்மான் கான், சிரஞ்சீவி, விஷ்ணுவர்தன் என இவர் இந்தியாவின் அனைத்து சூப்பர் ஸ்டார்களுக்கும் பாடியுள்ளார். கடந்த மாதம் கொரொனா தொற்று ஏற்பட்டது, இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி ஆகினர்.

அதை தொடர்ந்து அவர் பூரண குணமாக தமிழக ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய மக்களும் பிரார்த்தனை செய்து வந்தனர். பல திரைப்பிரபலங்கள் இவருக்காக கண்ணீர் வடித்தனர். இன்று மதியம் 1.04 மணி அளவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னணி பாடகர் எஸ்.பி.பி மரணமடைந்தார். இவரின் மறைவு இந்திய திரையுலகிற்கு மிக பெரிய இழப்பையும், துயரத்தையும் அளித்துள்ளது.

இவரின் உடல் நம்மை விட்டு சென்றாலும், இவரின் குரல் என்றும் நம்மைவிட்டு நீங்காது. எஸ்.பி.பியின் மறைவிற்கு திரையுலகை சேர்ந்த பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் எஸ்.பி.பி.யின் மறைவு குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது இரங்கலை உருக்கமான வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். இதோ அந்த வீடியோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *